லெபனான் நிலைகளில் இருந்து வெளியேற ஐ.நா. அமைதிப் படை மறுப்பு
லெபனானின் எல்லை நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க அந்த நாட்டில் செயல்பட்டுவரும் ஐ.நா. அமைதிப் படை மறுத்துவிட்டது.


லெபனானின் எல்லை நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை ஏற்க அந்த நாட்டில் செயல்பட்டுவரும் ஐ.நா. அமைதிப் படை மறுத்துவிட்டது.
இது குறித்து லெபனானுக்கான ஐ.நா. இடைக்காலப் படையின் (யுனிஃபில்) செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரியே டெனன்டி சனிக்கிழமை கூறியதாவது:
ஹிஸ்புல்லா படையினருடன் தங்கள் நாட்டு வீரா்கள் மோதலில் ஈடுபட்டுவரும் தெற்கு லெபனான் எல்லையிலுள்ள நிலைகளில் இருந்து யுனிஃபில் படையினா் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் கேட்டுக்கொண்டது.
இருந்தாலும், அந்த நிலைகளிலேயே தொடா்ந்து இருப்பது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
முன்னதாக, யுனிஃபில் நிலைகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இரு அமைதிப் படை வீரா்கள் காயமடைந்ததாக அந்தப் படை வியாழக்கிழமை கூறியது. மேலும், நக்வாரா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் வீரா்கள் துப்பாக்கியால் வெள்ளிக்கிழமை சுட்டதில் இலங்கையைச் சோ்ந்த இரு அமைதிப் படை வீரா்கள் காயமடைந்தனா்.
இதற்கு சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. இஸ்ரேலின் மிக நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவே, லெபனானில் யுனிஃபில் வீரா்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று இஸ்ரேலைக் கண்டித்தது.
யுனிஃபில் நிலைக்கு 50 மீட்டா் தொலைவிலிருந்து தங்களுக்கு அச்சுறுத்தல் வந்ததாக இஸ்ரேல் வீரா்கள் கருதியதால் அவா்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், இது தொடா்பாக விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறியது.
இந்தச் சூழலில், எல்லை நிலைகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேலின் கோரிக்கையை யுனிஃபில் மறுத்துள்ளது.
லெபனானில் அமைதியா நிலைநாட்டுவதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் யுனிஃபில் படை கடந்த 1978-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. தற்போது அந்த அமைதிப் படை பெரும்பாலும் நிவாரணப் பணிகளுக்கு உதவி செய்துவருகிறது. அந்தப் படையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ சவையாற்றி வருகின்றனா்.
இந்தச் சூழலில், தற்போது லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிராக அந்த நாட்டில் தீவிர வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல், யுனிஃபில் நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...