அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இஸ்ரேல் பல்முனைத் தாக்குதல்: லெபனானில் 13 பேர் பலி!

லெபனானின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.

News image
வான்வழித் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் ராணுவ ஹெலிகாப்டர் - AP
Updated On :13 அக்டோபர் 2024, 2:03 pm

DIN

லெபனானின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், 36 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,

2''லெபனானில் செளஃப் (Chouf ) மாவட்டத்திற்குட்பட்ட பர்ஜா (Barja) பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் 4 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். ஏவுகணைத் தாக்குதலில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்ததால், அருகிலிருந்த கட்டடங்களும் சேதமடைந்தன.

உயிரிழந்தவர்களின் உடல்களும் படுகாயமடைந்தவர்களும் சிப்லின் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

லெபனானில் மாயிஸ்ரா (Maaysra) பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

பாஸ்ரெளன் மாவட்டத்திற்குட்பட்ட தெர் பில்லா (Deir Billa) பகுதியில் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்தனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலுக்குச் சொந்தமான போர் விமானம் நபாடி நகரத்தில் உள்ள வணிக வளாகத்திற்கு மேல் பறந்தபோது, குண்டுகளை வீசியுள்ளது. இதில் 30 கடைகள் முழுவதும் சேதமடைந்தன. 5 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்கத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி முதல் இஸ்ரேல் - ஹமாஸ் படையினரிடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் படைக்கு ஹிஸ்புல்லாக்கள் ஆதரவாக செயல்படுவதால், ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனானிலும் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.