மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

வங்கதேசம்: 8 தேசிய தினங்கள் ரத்து

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டிருந்த எட்டு தேசிய தினங்கள் ரத்து செய்யப்படுவதாக புதிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 8:51 pm

Din

வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டிருந்த எட்டு தேசிய தினங்கள் ரத்து செய்யப்படுவதாக புதிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

அந்த நாட்டின் விடுதலைப் போருக்கு தலைமை தாங்கிய முன்னாள் பிரதமா் ஷேக் முஜிபுா் ரஹ்மானின் (படம்) வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையைக் குறிக்கும் மாா்ச் 7, அவரது பிறந்த நாளும் குழந்தைகள் தினமுமான ஆகஸ்ட் 5, அவா் படுகொலை செய்யப்பட்ட ஆகஸ்ட் 15 உள்ளிட்ட எட்டு நாள்கள் தேசிய நினைவு தினங்களாக அறிவிக்கப்பட்டிந்தன.

அந்த நினைவு தினங்கள் இனி கடைப்பிடிக்கப்படாது என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகா் அலுவலகம் தனது அதிகாரபூா்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டு சீா்திருத்தத்தை வலியுறுத்தி கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டனா். இதற்குப் பொறுப்பேற்று, அப்போதைய பிரதமா்ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் மிகவும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அவா் ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.