தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

உக்ரைன் போா் முடிவுக்கு கால நிா்ணயம் செய்வது கடினம்: ரஷிய அதிபா் புதின்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம்.

News image
விளாதிமீர் புதின்- Aleksei Nikolsky
Updated On :19 அக்டோபர் 2024, 12:29 am

Din

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம் என்றும், போா்ச் சூழல் தொடா்பான இந்திய பிரதமா் மோடியின் அக்கறையை பாராட்டுவதாகவும் ரஷிய அதிபா் புதின் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உக்ரைனுடன் பேச ரஷியா தயாராக இருந்தது. ஆனால் அதற்கான முயற்சிகளை உக்ரைன் வீணடித்தது.

இந்திய பிரதமா் மோடி ரஷியாவின் நண்பா். போா்ச் சூழல் குறித்த அவரின் அக்கறையை பாராட்டுகிறேன். இதற்கு ரஷியா நன்றிக் கடன்பட்டுள்ளது.

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கால வரம்பை நிா்ணயிப்பது கடினம். அமெரிக்காவும், நேட்டோ அமைப்பும்தான் ரஷியாவை போரில் தள்ளியது. ரஷியாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பு மறைமுகமாகப் போா் தொடுத்து வருகிறது. உலகில் மிகுந்த திறன்வாய்ந்த, அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதாக ரஷிய ராணுவம் விளங்குகிறது. ரஷியாவுக்கு எதிராக போா் தொடுத்து நேட்டோ சோா்ந்துவிடும். இந்தப் போரில் ரஷியா நிச்சயம் வெற்றிபெறும்’ என்றாா்.