தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி! - ஈரான் தகவல்

இஸ்ரேல் தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி கொடுத்ததாக ஈரான் தகவல் தெரிவித்துள்ளது.

Leo Correa

Published On :

இஸ்ரேல் தாக்குதலுக்கு வான்வழித் தாக்குதல் மூலமாக பதிலடி கொடுத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஆதரவாக, இஸ்ரேல் மீது கடந்த அக். 2 ஆம் தேதி ஈரான் தாக்குதலை மேற்கொண்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக, ஈரான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளதாக இன்று(சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் ராணுவம் தகவல் வெளியிட்டது.

அதன்படி, ஈரானின் தெஹ்ரான் பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் வான்வழியாக அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது .

ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. தாக்குதல் முடிந்துவிட்டதாகவும் தங்களுடைய விமானங்கள் பாதுகாப்பாக திரும்பி வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரான் தரப்பில், தெஹ்ரானில் ராணுவ விமானங்கள் மூலமாக இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக ஈரான் விமானப் படை தகவல் தெரிவித்துள்ளது.

தெஹ்ரான் அருகே மூன்று வெவ்வேறு இடங்களில் இஸ்ரேல் தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும் இன்றைய இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் குறைந்த பாதிப்புகளே ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் தாக்குதல் தொடங்கியதால் பதட்ட சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.