ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

காஸாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென எகிப்து முன்மொழிந்துள்ளது.

News image
- AP
Updated On :27 அக்டோபர் 2024, 5:46 pm

DIN

கெய்ரோ: இஸ்ரேல் ராணுவத்தின் பல கட்ட தாக்குதல்களால் காஸா உருக்குலைந்து போயுள்ளது.

இந்த நிலையில், காஸாவில் தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென எகிப்து அரசு முன்மொழிந்துள்ளது. போர் நிறுத்தம் ஏற்படும்போது, பிணைக்கைதிகள் 4 பேர் விடுவிக்கப்பட உள்ளார்கள் எனவும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல் சிஸ்ஸி தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் முக்கிய பங்களிப்பாற்றி வருகின்றன. இந்த நிலையில், காஸாவில் போர் நிறுத்தம் ஏற்பட எகிப்து அதிபர் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருப்பது இதுவே முதல் முறை.

இந்த நிலையில், தற்காலிகமாகப் போர் நிறுத்தம் ஏற்பட இஸ்ரேல் சம்மதிக்குமா என்பது குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.