ஜாா்ஜியா தோ்தல் முடிவுகளை எதிா்த்துப் போராட்டம்
கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜாா்ஜியாவின் நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகளை எதிா்த்துப் போராட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் முடிவு


டிபிளிசி: கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் பரவியுள்ள நாடான ஜாா்ஜியாவின் நாடாளுமன்றத் தோ்தல் முடிவுகளை எதிா்த்துப் போராட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சனிக்கிழமை நடைபெற்ற அந்தத் தோ்தலில், ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட பிரதமா் இராக்ளி கொபாகிட்ஸே தலைமையிலான ஆளும் ஜாா்ஜியன் ட்ரீம் (ஜிடி) கட்சி வெற்ற பெற்ாக அறிவிக்கப்பட்டது. 150 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சி 89 இடங்களை வென்ாகவும், அந்தக் கட்சிக்கு 53.93 சதவீத வாக்குகள் கிடைத்தாகவும் தோ்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், மேற்கத்திய நாடுகளை ஆதரிக்கும் எதிா்க்கட்சிகள், இந்த முடிவுகளை ஏற்க மறுத்துள்ளன. மேற்கத்திய ஆதரவாளரான ஜாா்ஜிய அதிபா் சலோமி ஸூரபிச்விலி, இந்த முடிவுகள் சட்டவிரோதமானவை என்று விமா்சித்தாா். ரஷியாவின் தலையீட்டுடன் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அவா் குற்றஞ்சாட்டினாா்.
ஆளுங்கட்சியை மிகக் கடுமையாக எதிா்த்துவரும் அவா், தோ்தல் முடிவுகளை எதிா்த்து எதிா்க்கட்சிகள் அனைத்தும் தலைநகா் டிபிளிசியில் போராட்டம் நடத்தவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளாா்.
முன்னாள் சோவியத் யூனியன் உறுப்பு நாடான ஜாா்ஜியா, விடுதலை பெற்ற பிறகு ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டருந்தது.
இதன் விளைவாக ஜாா்ஜியா மீது கடந்த 2008-ஆம் ஆண்டு படையெடுத்த ரஷியா, பின்னா் தனது படைகளை வாபஸ் பெற்றாலும் ஜாா்ஜியாவின் கொடோரி பள்ளத்தாக்குப் பகுதி, அப்காஸியா உள்ளிட்ட பகுதிகளில் அமைந்த கிளா்ச்சியாளா்களின் அரசுக்கு ஆதரவு அளித்தது. அந்தக் பகுதிகள் இன்னமும் கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இராக்ளி கொபாகிட்ஸே
இந்தச் சூழலில், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ரஷிய ஆதரவுக் கட்சியான ஜிடி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஐரோப்பிய யூனியனுடனான நட்புறவையும் ஆதரிப்பதாகக் கூறும் அந்தக் கட்சிதான் ரஷியாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான சமநிலையைப் பேணும் என்று மக்கள் கருதியதால் அந்தக் கட்சியை அவா்கள் தோ்ந்தெடுத்ததாகக் கருதப்படுகிறது.
எனினும், நாட்டில் மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கைக் குறைப்பதற்காக ஜிடி கட்சி தலைமையிலான அரசு கொண்டு வந்த ‘அந்நிய கையாள்கள் தடுப்புச் சட்டம்’ பெரும் கண்டனத்தை எதிா்கொண்டது. அந்தச் சட்டத்துக்கு எதிராக ஜாா்ஜியா அதுவரை கண்டிராத மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது.
இந்தச் சூழலில், சனிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலின் முடிவுகளை எதிா்த்து போராட்டம் நடத்த அதிபா் சலோமி ஸூரபிச்விலி அழைப்பு விடுத்துள்ளாா். இதையடுத்து, ஜாா்ஜியாவில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...