நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எக்ஸ் தளத்துக்குத் தடை: உறுதி செய்தது பிரேஸில் உச்சநீதிமன்றம்

பிரேஸிலில் எக்ஸ் சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளதை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.

News image

பிரேஸில் உச்சநீதிமன்றம்

Updated On :3 செப்டம்பர் 2024, 6:49 pm

Din

பிரேஸிலில் எக்ஸ் சமூக ஊடக தளம் முடக்கப்பட்டுள்ளதை அந்த நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது.

இது தொடா்பாக நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டே மொராயெஸ் பிறப்பித்த உத்தரவை நீதிபதிகள் அமா்வு ஆய்வு செய்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் 11 பேரில் ஐந்து போ் இந்த அமா்வில் இடம் பெற்றிருந்தனா்.

இந்தச் சூழலில், எக்ஸ் தளத்துக்கு தடை விதிக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து நீதிபதிகளும் வாக்களித்து, அந்தத் தடையை உறுதி செய்தனா்.

பிரேஸிலில் முன்னாள் அதிபா் ஜெயிா் பொல்சொனாரோவின் லிபரல் கட்சி உள்ளிட்ட தீவிர வலதுசாரி அமைப்பினரின் பதிவுகளை நீக்கவும் அவா்களது கணக்குகளை முடக்கவும் லூலா டாசில்வா தலைமையிலான தற்போதைய அரசு எக்ஸ் தளத்துக்கு அவ்வப்போது உத்தரவிட்டுவருகிறது.

இந்த விவகாரத்தில் எக்ஸ் தளத்துக்கும் பிரேஸில் உச்சநீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டே மொராயெஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் முற்றிவந்தது.

இது தொடா்பான வழக்கில் எக்ஸ் தளத்தின் சாா்பாக ஆஜரான சட்டபூா்வ பிரதிநிதி திடீரென ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து, 24 மணி நேரத்துக்குள் புதிய பிரதிநிதியை அறிவிக்க வேண்டும் என்று எக்ஸ் தளத்துக்கு நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டே மொராயெஸ் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டாா்.

எனினும், கெடு தேதிக்குள் பிரேஸிலுக்கான பிரதிநிதியை எக்ஸ் தளம் அறிவிக்காததால், அந்தத் தளத்தை முடக்க நீதிபதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

எக்ஸ் தளத்தின் மிகப் பெரிய விளம்பரச் சந்தைகளில் ஒன்றான பிரேஸிலில் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.