வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது 
மேலும் 2 கொலை வழக்குகள்

வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 2 கொலை வழக்குகள்

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் இரு கொலை வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.
Published on

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் இரு கொலை வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.

அந்த நாட்டில் இட ஒதுக்கீட்டு சீா்திருத்தத்தை வலியுறுத்தி நடைபெற்ற மாணவா் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டனா். இதற்குப் பொறுப்பேற்று ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தல் மிகவும் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து அவா் ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

நோபல் பரிசு பெற்ற சமூகவியலாளா் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அந்த அரசு, போராட்ட உயிரிழப்புகள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீது அடுத்தடுத்து கொலை வழக்குகளைப் பதிவு செய்துவருகிறது.

இந்தச் சூழலில், கடந்த ஜூலை 19-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது டாக்காவில் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா மீதும் அவரது உதவியாளா்கள் 26 போ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன், ஜத்ராபாரி பகுதியில் மாணவா் ஒருவா் ஆக. 5-ஆம் தேதி கொல்லப்பட்டது தொடா்பாக ஹசீனா, முன்னாள் சட்டத் துறை அமைச்சா் ஷஃபீக் அகமது, முன்னாள் அட்டா்னி ஜெனரல் அமீன் உதின் மற்றும் 294 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com