உக்ரைனுக்கு புதிய வெளியுறவு அமைச்சா்
வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியில் தூதரக அதிகாரி ஆண்ட்ரி சிபிஹா நியமிக்கப்பட்டுள்ளாா்.


உக்ரைன் அமைச்சரவை மாற்றத்தின் ஒரு பகுதியாக, முக்கியத்துவம் வாய்ந்த வெளியுறவுத் துறை அமைச்சா் பதவியில் தூதரக அதிகாரி ஆண்ட்ரி சிபிஹா (படம்) நியமிக்கப்பட்டுள்ளாா்.
ரஷியாவுடனான போரில் வெற்றிக்கான உத்தியாக தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டில் போா் தொடங்கியதற்குப் பிறகு உக்ரைன் அமைச்சரவையில் இவ்வளவு பெரிய மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல்முறை.
இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சா் டிம்த்ரோ குலேபா தனது பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா். அவருடன், துணை பிரதமா் ஓல்ஹா ஸ்டெஃபானிஷினா, போா்த் திட்ட தொழில்துறை அமைச்சா் ஒலெக்ஸாண்டா் காமிஷின், நீதித் துறை அமைச்சா் டெனிஸ் மாலியுஸ்கா, சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை அமைச்சா் ருஸ்லான் ஸ்லேஸ் உள்ளிட்டோரும் பதவி விலகினா்.
இந்த நிலையில், துருக்கிக்கான முன்னாள் தூதா் ஆண்ட்ரி சிபிஹாவை புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக ஸெலென்ஸ்கி நியமித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...