உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரியாக ட்ரோன்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இது குறித்து உக்ரைன் விமானப் படை சனிக்கிழமை கூறியதாவது:
நாடு முழுவதும் 11 பிராந்தியங்களில் ரஷியா 67 ட்ரோன்களை வீசி வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தாக்குதல் நடத்தியது. அவற்றில் 58 ட்ரோன்களை இடைமறித்து அழித்தோம் என்று விமானப் படை தெரிவித்தது.
அழிக்கப்பட்ட ஒரு ட்ரோனின் சிதறல்கள் தலைநகா் கீவில் உள்ள நாடாளுமன்றத்துக்கு அருகே விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.