திரைப்படத்துக்கு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்! அருணாச்சலம் குடும்பத்துக்கு என்ன பதில்? உதயநிதி கண்டனம்தூத்துக்குடியில் காவல் மரணம்? காவல்துறை விளக்கம்!காரணம் கூறாமல் 3 மாதம் சிறை! தில்லியில் தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்! காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை!தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடி
/

டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார்! ஜோ பைடன்

டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, பைடன் வெளியிட்ட அறிக்கை.

News image

அமெரிக்க அதிபா் ஜோ பைடன்

Updated On :16 செப்டம்பர் 2024, 8:27 am IST

துப்பாக்கிச் சூட்டில் டொனால்டு டிரம்ப் காயமடையவில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் வீட்டருகே துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் டிரம்ப்பை கொல்ல முயற்சி?

புளோரிடாவில் வெஸ்ட் பாம் கடற்கரை அருகே உள்ள டிரம்புக்கு சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை (உள்ளூர் நேரம்) விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, மைதானத்துக்கு வெளியே இரண்டு நபர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த நபர்கள் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்களா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.

ஜோ பைடன் அறிக்கை

இந்த நிலையில், டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து எனது குழுவினர் விளக்கினர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது. ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் அதிபரை பாதுகாத்த ரகசிய சேவை அதிகாரிகளின் பணியை நான் பாராட்டுகிறேன். டிரம்ப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதில் நிம்மதி அடைந்துள்ளேன்.

பலமுறை கூறியதுபோல், நம் நாட்டில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை.

மேலும், டிரம்ப்புக்குத் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ரகசிய சேவை அதிகாரிகள் உறுதிப்படுத்த எனது குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டிரம்ப் போட்டியிடும் நிலையில், ஏற்கனவே, ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

அப்போது, அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.