நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்புஇசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு!

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய நிதியை ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக அதிபர் டிரம்ப் பேச்சு...

அமெரிக்க அதிபர் டிரம்ப் - உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி - கோப்புப் படம்

Published On :4 செப்டம்பர் 2026, 8:38 pm IST

உக்ரைனுக்கு அமெரிக்கா சார்பில் வழங்கப்பட்ட நிதியுதவியை திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

ரஷியா உடனான உக்ரைனின் போரைத் தொடர்ந்து, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனின் ஆட்சிக்காலத்தில் உக்ரைனுக்கு கோடிக்கணக்கான டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டன. இதைத் தற்போதைய அதிபர் டிரம்ப் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஐரோப்பியர்கள் பெரும் பங்கெடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அரசு வழங்கிய நிதியுதவியைத் திருப்பிச் செலுத்துமாறு ஐரோப்பிய நாடுகளிடம் கேட்கப்போவதாக, அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதுபற்றி, வியாழக்கிழமை (செப். 3) அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,

“நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள், உக்ரைன் மற்றும் நேட்டோ அமைப்புக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஐரோப்பாவிடம் கேட்டிருந்தார் அவர்களே அந்தத் தொகையைச் செலுத்தியிருப்பார்கள். ஆனால், சற்று தாமதமாகவேனும் அந்தப் பணத்தை நாங்கள் திரும்பக் கேட்போம்” எனக் கூறியுள்ளார்.

இந்தப் பதிவில், எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும் என அவர் குறிப்பிடாத நிலையில், இந்த விவகாரம் இணையவாசிகள் இடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது.

Summary

Trump has stated that he intends to ask Europeans to repay the financial aid provided to Ukraine on behalf of the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.