பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறைமாதம் ஒரு நாள் 'புத்தகப்பை இல்லா நாள்': பள்ளிக் கல்வித் துறைபள்ளிகளில் ஓடி விளையாடு என்ற திட்டத்தின் மூலம் நாள்தோறும் விளையாடலாம்: பள்ளிக் கல்வித் துறைபரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

போர் பாதிப்பு: உக்ரைனுக்கு ரூ. 68,000 கோடி நிதியுதவி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ரூ. 68,000 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது பற்றி...

ரஷியாவிற்கு எதிராக டிரோன்களை தயார்படுத்தும் உக்ரைன் வீரர்கள் - AP

Published On :24 ஆகஸ்ட் 2026, 5:09 pm IST

ரஷியாவின் தாக்குதல்கள் காரணமாக உக்ரைன் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அதன் வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த ரூ. 68,000 கோடி நிதியுதவியை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ளது.

உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு இடையே இராணுவ ஆதரவை அதிகரிப்பது தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவர் பேசுகையில், “உக்ரைனின் சுதந்திர நாளான இன்று அவர்களுக்கு எங்களின் உறுதியான ஆதரவை நாங்கள் வழங்குகிறோம். இன்று, உக்ரைக்கு முக்கியத் தேவையாக உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், வெடிமருந்துகள் மற்றும் ரேடார்களுக்காக ரூ. 68,000 கோடி நிதியுதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், "ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைன் மீது 376 ஏவுகணைத் தாக்குதல்களை ரஷியா நடத்தியுள்ள நிலையில், உக்ரைனின் பாதுகாப்பை வலுப்படுத்துவது முக்கியத் தேவையாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிதி அவர்களுக்கான 90 பில்லியன் யூரோ கடனின் ஒரு பகுதியாகும். இதில், ராணுவ உதவிக்கான 60 பில்லியன் யூரோவும் அடங்கும். இது முழுவதும் உக்ரைனுக்கு வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதில், ஏற்கனவே 16 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டு அதில் 8.5 பில்லியன் உக்ரைனுக்கு முன்பே அனுப்பட்டுள்ளது.

உக்ரைன் தனது நகரங்களின் மீதான ரஷியாவின் தாக்குதல்களை முறியடிக்க, குறிப்பாக பேட்ரியாட் ரக வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஆயுதங்களை அதிகளவில் வாங்கவுள்ளது.

Summary

War Impact: European Union provides ₹68,000 crore in financial aid to Ukraine!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.