தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்புவிநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

ஹோர்முஸ் நீரிணையை டிரம்ப் நீரிணை என பெயர் மாற்றலாமா? டிரம்ப் கேள்வி!

ஹோர்முஸ் நீரிணையின் பெயரை டிரம்ப் நீரிணை என மாற்றலாமா என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

Strait of Hormuz | Donald Trump

ஹோர்முஸ் நீரிணை | டொனால்ட் டிரம்ப் - சித்திரிப்பு

Published On :

ஹோர்முஸ் நீரிணையின் பெயரை டிரம்ப் நீரிணை என மாற்றலாமா என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்ரூத்சோசியல் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ”ஹோர்முஸ் நீரிணை தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அதன் பெயரை டிரம்ப் நீரிணை என மாற்றலாமா? அமெரிக்காவைப் போன்று, அந்த நீரிணையும் முன்னெப்போதையும் விட கவர்ச்சிகரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் டிரம்ப் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். இப்பதிவைப் பகிர்ந்த அதிபர் மாளிகையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கம், டிரம்ப் நீரிணை என ஹோர்முஸ் நீரிணையின் பெயரை மாற்றி அதற்கான வரைபடத்தைப் பகிர்ந்திருந்தது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முடக்கும் நோக்கில், அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரியில் தொடங்கிய இப்போா், தற்காலிகமாக இடையே நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

ஈரானில் ஹோா்முஸ் நீரிணைக்கு அருகே கடலோரங்களில் அமைந்துள்ள அந்நாட்டின் வான்பாதுகாப்பு அமைப்புகள், ரேடாா் நிலையங்கள், கடல்சாா் வளங்கள், கண்ணிவெடி அமைக்கும் தளங்கள் மற்றும் தொலைத்தொடா்பு மையங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் நேற்று தாக்குதல் நடத்தியது.

இதில் ஒரே இரவில் 12 போ் பலியானதாகவும், ஒரு திருமண வீட்டின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வயது குழந்தை உள்பட 4 போ் பலியானதாகவும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், பொதுமக்களைக் குறிவைத்து எந்தத் தாக்குதலும் நடத்தவில்லை என அமெரிக்க ராணுவம் மறுப்புத் தெரிவித்தது.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, பஹ்ரைன், ஜோா்டான், குவைத், இராக் ஆகிய வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களைக் குறிவைத்து, ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது.

இதில், அமெரிக்க படையினா் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்ததை மெரிக்க அதிகாரிகள் மறுத்தனா்.

அமெரிக்கா-ஈரான் இடையிலான இப்புதிய தாக்குதல்களின் எதிரொலியாக, உலகளாவிய பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வா்த்தகத்தில் பெரும் சரிவு காணப்பட்டது. மேலும், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் ஜூலை மாதத்துக்குப் பிந்தைய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Summary

US President Trump has raised the question of whether the Strait of Hormuz could be renamed the "Trump Strait."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.