அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

லெபனான்: தொலைத்தொடர்பு கருவிகளை வெடிக்கச் செய்து தாக்குதல் -ஆயிரக்கணக்கானோர் காயம்!

சிரியா, லெபனானில் பொதுஇடங்களில் தொலைத்தொடர்பு கருவிகள் வெடிப்பு - 8 பேர் பலி

News image
Updated On :17 செப்டம்பர் 2024, 4:13 pm

DIN

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தோர் தகவல் பரிமாற்றத்துக்காக பயன்படுத்திவரும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை வெடிக்க செய்ததில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காஸாவில் ஹமாஸ் படையுடனான இஸ்ரேலின் சண்டையைத் தொடர்ந்து, லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையும் ஹிஸ்புல்லாக்களை குறிவைத்து லெபனான் மற்றும் சிரியாவில் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, கைப்பேசிகளைப் போலவே உள்ள ல்பேஜர்ஸ்ல் என்றழைக்கப்படும் மின்னணு தொலைத்தொடர்பு கருவிகளில் உள்ள பேட்டரிகளை சைபர் தாக்குதல் மூலம் இஸ்ரேல் வெடிக்கச் செய்திருப்பதாக ஹிஸ்புல்லா குற்றஞ்சாட்டியுள்ளது.

லெபனானில் பல்வேறு பகுதிகளிலும் பேஜர்ஸ் கருவிகள் வெடித்திருப்பதால் பலர் காயமுற்று மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. லெபனானில் பரவலாக பயன்படுத்தப்படும் இந்த மின்னணு சாதனங்களில் பொருத்தப்படுள்ள லித்தியம் பேட்டரி வெடித்ததே ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட முக்கிய காரணம்.

இந்த தாக்குதலில் லெபனானுக்கான ஈரான் தூதர் மோஜ்தாபா அமானி, உள்பட ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்தவர்களும், ஏராளமான பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். ஈரான் தூதர் மோஜ்தாபா அமானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே பொறுப்பு என லெபனான் அதிகாரிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 8 வயது சிறுமி உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,750 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபிராஸ் அபியாத் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, ரத்தக்கறையுடன் ஏராளமானோர் மருத்துவமனைகளை நாடிச் செல்வதால் லெபனானிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பிவழிவதாகக் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடுமென அஞ்சப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.