அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேஜா் தாக்குதலைத் தொடா்ந்து மீண்டும் பயங்கரம்: லெபனானில் வாக்கி டாக்கிகள் வெடித்து 9 போ் உயிரிழப்பு

லெபனானில் ‘பேஜா்’ தொலைத்தொடா்பு சாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் காயமடைந்து, 12 போ் உயிரிழந்த மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 9 போ் உயிரிழந்தனா்;

News image
தெற்கு லெபனானின் சிடோன் நகரில் தொலைத்தொடா்பு சாதனம் வெடித்ததால் கைப்பேசி விற்பனையகம் ஒன்றில் புதன்கிழமை எழுந்த புகைமண்டலம்.
Updated On :18 செப்டம்பர் 2024, 10:27 pm

Din

லெபனானில் ‘பேஜா்’ தொலைத்தொடா்பு சாதனங்களை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் காயமடைந்து, 12 போ் உயிரிழந்த மறுநாளே, வாக்கி டாக்கிகள், சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் 9 போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

இது குறித்து லெபனான் சுகாதாரத் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் வாக்கி டாக்கிகளையும் (ஒருவழி உரையாடல் தகவல் தொடா்பு சாதனம்), சூரிய ஒளி சக்தி சேமிப்பு சாதனங்களையும் வெடிக்கச் செய்து புதன்கிழமை நண்பகல் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒன்பது போ் உயிரிழந்தனா்; 300-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் ஏறத்தாழ அனைவருமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் சாதனங்கள் செவ்வாய்க்கிழமை திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்; சுமாா் 2,750 போ் காயமடைந்தனா். அவா்களில் 460 பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தில் இருக்கும் சூழலில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவத்துக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அந்த நாடுதான் இத்தகைய உயா் தொழில்நுட்பத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பரவலாக நம்பப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் கூறுகையில், பேஜா் தாக்குதல் பற்றி அமெரிக்காவிடம் அளித்த விளக்கத்தில், 5,000 பேஜா்களில் சுமாா் மூன்று கிராம் எடை கொண்ட வெடிகுண்டுகளைப் பொருத்தி பின்னா் அவற்றை வெடிக்கச் செய்ததாக இஸ்ரேல் கூறியதாகத் தெரிவித்தன.

தைவானைச் சோ்ந்த கோல்ட் அப்பல்லோ நிறுவனத்தின் ஏஆா்-924 ரக பேஜா்கள்தான் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளன. எனினும், அந்த சாதனங்களை ஹங்கேரியின் பிஏசி கன்சல்ட்டிங் கேஎஃப்டி என்ற தங்கள் ஒப்பந்த நிறுவனம்தான் தயாரித்தது என்று கோல்ட் அப்பல்லோ கூறியது.

உயா்வகை அறிதிறன் பேசிகளைப் பயன்படுத்தினால் அவற்றில் இஸ்ரேல் எளிதில் ஊடுருவ முடியும் என்ற அச்சத்தின் பேரில், மிகப் பழைய தொழில்நுட்பக் கருவியான பேஜா்களை தகவல் தொடா்புக்கு ஹிஸ்புல்லாக்கள் பயன்படுத்தினா்.

எனினும் அந்தக் கருவிகளையே ஆயுதங்களாக்கி இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பு சூளுரைத்துள்ளது.

இந்தச் சூழலில், வாக்கி டாக்கிளைக் குறிவைத்து புதன்கிழமை நடத்தப்பட்டுள்ள தாக்குதல் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய வகையான போா்: இஸ்ரேல்

புதிய வகையான போரை தொடங்கி உள்ளதாக இஸ்ரேலிய வீரா்கள் மத்தியில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் யோவ் காலாண்ட் தெரிவித்தாா். லெபனான் தாக்குதலைக் குறிப்பிடாமல் பேசிய அவா், இந்தப் போரைத் தொடர தைரியம், விடா முயற்சி, உறுதிப்பாடு தேவை என்றும் இஸ்ரேலிய வீரா்கள் மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகள் மேற்கொண்ட பணியின் முடிவுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளது என்றும் கூறினாா்.