கூகுளின் புதிய செய்யறிவு தொழில்நுட்பமான பார்டை (Bard) பெயர் மாற்றம் செய்யப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பார்டுடன் புதிய ஜெமினி (Gemini) செய்யறிவு தொழில்நுட்பத்தை இணைத்துள்ள கூகுள், பார்டையும் 'ஜெமினி' எனப் பெயர் மாற்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓப்பன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட் ஜிபிடிக்கு (Chat GPT) போட்டியாக களமிறங்கிய ஜெமினியில் பல புதிய மாற்றங்களைத் தொடர்ந்துவருவதாக கூகுள் தெரிவிக்கிறது. பெயர் மாற்றம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஜெமினி செயலி உருவாக்கும் டைலன் ரௌசெல்லிடமிருந்து கிடைத்த தகவல்படி அநேக பெயர்மாற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஜெமினியில் குரல்வழி உரையாடல்களை மேற்கொள்ளும் வகையிலான புதிய அம்சங்களையும், ஜெமினை அட்வான்ஸ்டு அல்ட்ரா 1.0 (Gemini advanced - ultra 1.0) என்ற புதிய ஜெமினி வடிவத்தையும் கூகுள் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: குழந்தையிடமிருந்து கற்றுக்கொள்ளும் செய்யறிவு தொழில்நுட்பம்!
ஜெமினி அட்வான்ஸ்டு இதுவரை 230 நாடுகளில் கிடைக்கிறது. இந்த சேவைக்கு பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 40 மொழிகளில் இந்த ஜெமினி செய்யறிவு இயங்குகிறது. அதில் தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளும் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துரந்தர் 2 படத்தின் தமிழ் மொழிக் காட்சிகள் ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்!!

தினேஷ் கார்த்திக் - தீபிகா தம்பதிக்கு 3-வது குழந்தை!

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிரத்னம் படக்குழு..! ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர்!

வீழ்ச்சிக்கு பிறகு... எழுச்சி பெற்ற பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

