அதிகாரபூர்வ முடிவுகள்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்

பொதுத் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக வெளியிட்டு வருகிறது அந்த பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்.
வாக்கு எண்ணும் மையம் | AP
வாக்கு எண்ணும் மையம் | AP

பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இதுவரை 66 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான முடிவுகளை அறிவித்துள்ளது.

இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சி ஆதரவு வேட்பாளர்கள் 22 இடங்களிலும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) 22 இடங்களிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆட்சியில் உள்ள ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சி 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தேர்தல் முடிந்த 15 மணி நேரங்களாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடாத தேர்தல் ஆணையம் பிடிஐ உள்ளிட்ட கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பிறகு வேகமாக முடிவுகளை அறிவித்து வருகிறது.

பாகிஸ்தானில் 265 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற 133 தொகுதிகளில் வெற்றிப் பெறும் கட்சி ஆட்சியமைக்க தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com