பன்முனை தாக்குதல்: விரிவடைகிறதா போர்?

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்வரை இந்தப் பதட்டம் நீடிக்கும் எனக் கருதப்படுகிறது.
லெபனான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் | AP
லெபனான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் | AP

கடந்த வாரத்தில் இஸ்ரேல், லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் நடத்திய வான்வழி தாக்குதலில் மூத்த ஹமாஸ் தலைவர் பலியாகியுள்ளார். 

ஹிஸ்புல்லா, இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது, பாக்தாத் பகுதியில் அமெரிக்க ராணுவம் பயங்கரவாதி ஒருவரை சுட்டுக் கொன்றது.

யேமனில் ஈரானிய ஆதரவு பயங்கரவாதிகள் அமெரிக்க கப்பலைத் தாக்கியுள்ளனர்.

ஒவ்வொரு தாக்குதலும் அதற்கான பதில் தாக்குதலும் இந்தப் போர், எல்லைகளைக் கடந்து விரிவடையும் அபாயத்தை அதிகரிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இடுபாடுகளிடையே மீட்புப் பணியில் பாலஸ்தீனர்கள் | AP
இடுபாடுகளிடையே மீட்புப் பணியில் பாலஸ்தீனர்கள் | AP

இஸ்ரேலில் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதல் அக்.7 முதல் இன்னொரு சிக்கலாக இருப்பது  லெபனான் ஆயுதக்குழுக்கள். இஸ்ரேல் லெபனானை எதிர்கொள்ள ஆயத்தமாகியுள்ளது. ஆனால் அமெரிக்கா, போர் விரிவடைவதைத் தடுக்க நினைத்தாலும் அமெரிக்க நிலைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலளித்து வருகிறது.

காஸாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும்வரை இந்தப் பதட்டம் நீடிக்கும் எனக் கருதப்படுகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ராணுவ ரீதியாகவும் அலுவல் ரீதியாகவும் ஆதரவளித்து வருகிறது. 

அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஜோசப் போரெல், ஜெர்மன் வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்காவும் ஈரானும் வெளிப்படையாக போரில் இறங்கினால் உலகளவில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என அரசியல் கவனிப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com