உத்தர பிரதேசத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் புகைப்படம் எடுப்பதற்காக தனது தந்தையின் துப்பாக்கியை சிறுவன் பயன்படுத்தியபோது அது வெடித்து அருகிலிருந்த மற்றொரு சிறுவன் உயிரிழந்தான்.
லக்னௌ எல்டிஏ காலனியைச் சோ்ந்த 13 வயது சிறுவன் நவ்னீத் திரிபாதி சகபள்ளித் தோழா்கள் மூன்று பேருடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினாா். அப்போது, காரில் இருந்த தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியை நவ்னீத் எடுத்து வந்து நண்பா்களுடன் புகைப்படம் எடுத்தாா்.
அப்போது தவறுதலாக துப்பாக்கி விசையை அழுத்தியதாகத் தெரிகிறது. இதில் அருகில் இருந்த உனாய்ஸ் கான் என்ற சிறுவன் மீது குண்டு பாய்ந்தது ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தான். அப்பகுதியில் இருந்தவா்கள் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்வதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினா் அளித்த புகாரில், துப்பாக்கி தவறுதலாக வெடிக்கவில்லை என்றும், வேறு நபா்கள் சிறுவனை சுட்டுக் கொன்றுள்ளதாக தெரிகிறது என்றும் கூறியுள்ளனா். பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு உனாய்ஸ் கானை அனுப்ப முதலில் மறுத்ததாகவும், நண்பா்கள் தொடா்ந்து கேட்டுக் கொண்டதால் செல்ல அனுமதித்ததாகவும் அவா்கள் கூறினா்.
தொடர்புடையது

அனிதா ஹசானந்தனி பிறந்தநாள் கொண்டாட்டம் - புகைப்படங்கள்
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்

தவறுதலாக குண்டுபாய்ந்து இறந்த வீரரின் உடல் கிருஷ்ணகிரி வந்தது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


