சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹிஸ்புல்லா- இஸ்ரேல் மோதல்: பலியான படைத் தளபதி

இந்த நிலையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியுள்ளது.

News image
இஸ்ரேல் ராணுவம் | AP
Updated On :8 ஜனவரி 2024, 12:41 pm

DIN

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் லெபனான் எல்லைகளில் நடைபெற்றுவரும் மோதல் தீவிரமாகி வருகிறது. ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு அக்.7 ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.

இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் முதன்மையான தலைவர் பலியானார். இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாள்களுக்குப் பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசியுள்ளது.

இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

 இஸ்ரேலின் ஹிஸ்புல்லா நிலைகள் மீதான தாக்குதலில் இதுவரை குறைந்தது 150 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.