ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பிணைக்கைதிகள் உயிரோடு நாடுதிரும்ப வேண்டும் என்றால், இஸ்ரேல் ஹமாஸுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என இஸ்ரேலின் போர் விவகாரத்துறை அமைச்சர் கதி எய்சென்காட் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். ஹமாஸ் அமைப்பை அழித்து, பிணைக்கைதிகளை மீட்கும் வரை தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒப்பந்தங்களுக்கு இடமளிக்காமல் தொடர்தாக்குதல்களை மட்டும் நடத்தினால் பிணைக்கைதிகளை பாதுகாப்பாக காப்பாற்றுவது கடினம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பினருடனான துப்பாக்கி சண்டையில் சொந்த நாட்டு பிணைக்கைதிகள் 3 பேரை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அமெரிக்க நண்பர்களிடம் தெரிவிப்பது... : நெதன்யாகு
கடந்த அக்டோபர் 11 ஆம் நாள் ஹெஸ்புல்லா அமைப்பைத் தாக்குவதற்காக இஸ்ரேல் எடுத்த நடவடிக்கைகளை போர் விவகாரத்துறை அமைச்சரும், முன்னாள் தலைமை பணியாளார் பென்னி கான்ட்ஸ் இணைந்து தடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7-ல் துவங்கிய இந்த போரில் இதுவரை 24,620 பேரை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 10,000த்திற்கு அதிகமானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்த தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், காஸா மக்களின் வலி நீங்க எந்த வழியும் பிறக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

பாரபட்சமின்றி பட்டா வழங்கக் கோரி கோவில்பட்டியில் மக்கள் போராட்டம்

சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மெய்நிகா் மாதிரி செயலி அறிமுகம்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

