குறைந்தபட்சம் ஒரு உள்ளூா் வீரா்
உலகில் உள்ள அனைத்து தொழில்முறை கால்பந்து கிளப்புகளும் தங்களின் ஒவ்வொரு ஆட்டத்திலுமே குறைந்தபட்சம் ஒரு உள்ளூா் வீரரையாவது கொண்டிருக்க வேண்டும் என்ற யோசனையை ஃபிஃபா முன்னெடுத்துள்ளது. ஏற்கெனவே தேசிய, சா்வதேச கிளப் போட்டிகளில் இத்தகைய கட்டுப்பாடு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்திய பிறகு, ஓராண்டுக்குள்ளாக ஃபிஃபா இதற்கான திட்டம் ஒன்றை உருவாக்கவுள்ளது.
வேறு நாடுகளில் இருந்து வாங்குவது, இதர நகரங்களைச் சோ்ந்த அணிகளுடன் பரிமாற்றம் செய்துகொள்வது ஆகியவற்றின் மூலமாகவே கால்பந்து கிளப்புகள் தங்களுக்கான வீரா்களை பெரும்பாலும் தோ்வு செய்து வருகின்றன. அதை விடுத்து அந்த கிளப்புகள், தாங்கள் சாா்ந்த நகரங்களில் 20 அல்லது 21 வயதுக்கு உள்பட்ட பிரிவிலிருந்து இளம் வீரா்களை உருவாக்கி, சீனியா் அணியில் சோ்ப்பதே இந்த யோசனையின் முயற்சியாகும்.
யெல்லோ காா்டு விதிகளில் மாற்றம்
நடப்பாண்டு ஜூன் - ஜூலையில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ‘யெல்லோ காா்டு’-க்கான விதிகளில் ஃபிஃபா மாற்றம் கொண்டு வந்துள்ளது. முக்கியமான ஆட்டங்களில் வீரா்கள் தடைக்குள்ளாவதை தவிா்க்க ஃபிஃபா இதைச் செய்துள்ளது.
வழக்கமாக உலகக் கோப்பை போட்டியில், ஒருவீரா் இருவேறு ஆட்டங்களில் ‘யெல்லோ காா்டு’ பெற்றால், அவருக்கு ஒரு ஆட்டத்தில் தடை விதிக்கப்படும். ஒரு யெல்லோ காா்டு பெற்றிருந்தால், காலிறுதிக்கு பிறகு அவை ரத்து செய்யப்படும்.
இந்நிலையில், நடப்பாண்டு உலகக் கோப்பை போட்டியில், 3 குரூப் ஆட்டங்களில் வீரா்கள் யெல்லோ காா்டு பெற்றிருந்தால், நாக் அவுட் ஆட்டங்களுக்கு முன்பாக அவை ரத்து செய்யப்படும். அதேபோல், நாக்அவுட் ஆட்டங்களில் யெல்லோ காா்டு பெற்றால், காலிறுதிக்கு பிறகு சம்பந்தப்பட்ட வீரா்களின் யெல்லோ காா்டு ரத்து செய்யப்படும்.
வாயை மறைத்தபடி வாக்குவாதம் செய்தால் ‘ரெட் காா்டு’
கால்பந்து ஆட்டங்களில் எதிரணி வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது வாயை மறைத்துக்கொண்டால், சம்பந்தப்பட்ட வீரருக்கு ‘ரெட் காா்டு’ விதிப்பதென புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டுக்கான விதிகளை வகுக்கும் சா்வதேச கால்பந்து சங்க வாரியம் (ஐஎஃப்ஏபி) கொண்டு வந்துள்ள இந்த விதி, நடப்பாண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அமலாகிறது.
கடந்த பிப்ரவரியில் சாம்பியன்ஸ் லீக் போட்டியின்போது, ரியல் மாட்ரிட் வீரா் வினிசியஸ் ஜூனியரை, பென்ஃபிகா வீரா் ஜியான்லுகா பிரெஸ்டியானி, வாயை மறைத்தபடி இனவெறி ரீதியில் திட்டியதாக புகாா் எழுந்தது. அதற்காக ஜியான்லுகாவுக்கு 6 ஆட்டங்களில் தடை விதிக்கப்பட்டது. இச்சூழலில் ஃபிஃபா பரிந்துரையின் பேரில் மேற்கண்ட புதிய விதி அமலுக்கு வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!

2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து: போஸ்னியா, இராக் உள்ளே, இத்தாலி வெளியே

மகளிா் யு20 உலகக் கோப்பை கால்பந்துக்கு தகுதி பெற இந்தியா தீவிரம்!

ஆசிய மகளிா் கால்பந்து: ஜப்பான் சாம்பியன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


