
ப்ளோரிடாவின் தம்பா பகுதியில் அமெரிக்க விமான படையின் தளத்தில் அமைந்துள்ள முன்னாள் கறுப்பினர்களுக்கான கல்லறை பகுதியில் நடந்த அகழாய்வில் 121 அடையாளம் தெரியாத கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேக்டில் விமான படையின் தளத்தில் மேலோட்டமான அகழாய்வு, கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. அதில் 121 கல்லறைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
மெக்டில் விமான படை அதிகாரிகள் தம்பா வளைகுடா வரலாற்று மையத்துக்கு 2019-ல் அந்தப் பகுதியில் கறுப்பின கல்லறை இருப்பதற்கான தகவலைக் கொடுத்தனர். அதனடிப்படையில் 2021-ல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
“கடந்த காலத்தில் தவறுகள் நடந்திருக்கலாம். இப்போது சமூகமாக ஒன்றிணைந்து செயல்படுகிறோம். தவறுகளை சரி செய்ய முயற்சிக்கிறோம்” என ராணுவ தளத்தின் செய்தித் தொடர்பாளர் லாரா ஆண்டர்சன் தெரிவித்தார்.
இதையும் படிக்க: போரில் பெண்கள் ஏன் பலியாகவேண்டும்? : ஐநா
மேலும், அதிகாரிகள் தேடுதல் பகுதியை விரிவடைய செய்யவிருப்பதாகவும் தளத்தை எவ்வாறு சிறந்த முறையில் ஆவணம் செய்வது மற்றூம் மரியாதை செலுத்துவது என்பது குறித்து சமூகத்தினருடன் கலந்து யோசிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.