இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 18 வயது நபர் 2022ல் விமானத்தில் பயணிக்கும்போது 'இந்த விமானத்தை வெடிக்க வைக்கப்போகிறேன். நான் தாலிபானைச் சேர்ந்தவன்.' எனக் கேலியாக நண்பர்களுக்கு மட்டும் அனுப்பிய புகைப்படக் குறுஞ்செய்தியை எப்படி இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்பினர் கண்டறிந்து நடவடிக்கை எடுத்தனர் என்ற கேள்வி தற்போது வலைதளத்தில் விவாதமாகியுள்ளது.
ஸ்னாப் சாட் (Snap chat) தளம் புகைப்படங்கள் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிக்கொள்ளப் பயன்படுகிறது. இந்த செயலி என்கிரிப்டட் (Encrypted) முறைப்படி குறுஞ்செய்திகளை அனுப்புகிறது. அதாவது அனுப்புனர் பெறுநரைத் தவிர வேறு யாராலும் இந்த குறுஞ்செய்திகளை இடைமறிக்க இயலாது என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.
ஜூலை 2022-ல் அந்த நபர் தனது நண்பர்களுக்கு மட்டும் அனுப்பிய குறுஞ்செய்தியை இங்கிலாந்து பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்து ஸ்பெயின் அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர். பாதுகாப்பு கருதி ஸ்பெயினின் எஃப்-18 ரக போர் விமானம் அந்த நபரின் விமானத்தை தரையிறங்கும் வரை பின்தொடர்ந்தது.
இதையும் படிக்க: அமெரிக்க செய்தியாளருக்கு ரஷியாவில் காவல் நீட்டிப்பு
தரையிறங்கியபின் விமானத்தில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த குறுஞ்செய்தி அனுப்பியவரும் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களுக்குப் பின்னர் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
அவர் மீதான விசாரணை இன்று நிறைவுற்ற நிலையில், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற விசாரணையின்போது எழுந்தே இதே கேள்வியில், விமான நிலைய வைஃபை சேவையால் அவரது குறுஞ்செய்தி இடைமறிக்கப்பட்டு அதனால் கசிந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் விமான நிலையத்தில் செய்தித் தொடர்பாளர் 'அந்த அளவுக்கு திறன் கொண்ட வைஃபை இங்கு இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.
'கண்டறியமுடியாத காரணங்களால் இந்த குறுஞ்செய்தி இங்கிலாந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தால் கண்டறியப்பட்டது' என நீதிபதி தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என ஸ்னாப் சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தனது நண்பர்கள் மட்டும் பார்க்கும் வகையில் இந்தக் குறுஞ்செய்தியை அவர் அனுப்பியிருப்பதால், பொதுமக்களை அச்சுறுத்த அவர் நினைக்கவில்லை என்பதும் அவர் விடுதலை செய்யப்பட்டதற்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் அந்த தனிப்பட்ட குறுஞ்செய்தியை அரசு எப்படி கண்டறிந்தது என்பது விடையளிக்கப்படாத கேள்வியாகவே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்

தனுசு ராசிக்கு இந்த நாள் எப்படி? தினப்பலன்கள்!
ரயில் டிக்கெட் பரிசோதனை அபராத வசூல் ரூ.160 கோடி: தெற்கு ரயில்வே அதிகாரிகள்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

