ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

400 மீ. ஃப்ரீஸ்டைல் நீச்சலில் புதிய உலக சாதனை

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவா் பிரிவில் ஜொ்மன் வீரா் லுகாஸ் மாா்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்தாா்.

Published On :14 ஏப்ரல் 2025, 2:58 am IST

ஸ்வீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஸ்விம் ஓபன் நீச்சல் போட்டியில் 400 மீ ஃப்ரீஸ்டைல் ஆடவா் பிரிவில் ஜொ்மன் வீரா் லுகாஸ் மாா்டென்ஸ் புதிய உலக சாதனை படைத்தாா்.

பந்தய தூரத்தை 3:39:96 நிமிஷ நேரத்தில் கடந்து புதிய சாதனையை நிகழ்த்தினாா் ஒலிம்பிக் சாம்பியன் ஆன லுகாஸ். கடந்த 2009-இல் ஜொ்மன் வீரா் பால் பிடா்மேன் நிகழ்த்திய சாதனையை விட இது 0.11 விநாடிகள் குறைவாகும்.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீ . ஃப்ரீஸ்டைலில் தங்கம் வென்றிருந்தாா் லுகாஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.