அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

சீனாவை மிரட்டும் சூறாவளி: 50 கிலோ எடைக்குள் இருப்போருக்கு எச்சரிக்கை!

சீனாவில் சூறாவளி காரணமாக உடல் எடை 50 கிலோவுக்குள் இருப்போர் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

சீனாவில் சூறாவளி

Updated On :15 ஏப்ரல் 2025, 4:16 pm IST

சீனாவில் கடுமையான சூறாவளிக் காற்று வீசிவரும் நிலையில், மக்களின் பாதுகாப்புக்காக, அங்கு பொதுமுடக்கம் போன்ற கடுமையான காட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பூங்காக்கள் மூடப்பட்டன. ரயில் சேவை பகுதியாக நிறுத்தப்பட்டு, விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், உடல் எடை 50க்குள் இருப்பவர்கள் வெளியே வர வேண்டாம், காற்றில் அடித்துச் செல்லப்பட நேரிடும் என்றும் எச்சரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி சீன அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். மேலும், 50 கிலோவுக்கும் கீழ் உடல் எடை இருப்பவர்களை, இந்த சூறாவளிக் காற்றி எளிதாக தூக்கி வீசிவிடும் என்றும் சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

சீன தலைவர் பெய்ஜிங்கில் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் கட்டடங்கள் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் சீனாவில் கடந்த 10 ஆண்டுகளில் சூறாவளிக்காக, ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, கடுமையான சூறாவளி காற்று காரணமாக ஒரே நாளில் திடீரென 13 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை திடீரென குறைந்துள்ளது. தற்போது மிக மோசமான வெப்பநிலை மாற்றத்தை சீனா அனுபவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.