அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு! முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!
/

உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

உடல் எடை சீரமைப்பு, உணவு ஊட்டச்சத்து ஆகிய பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2026, 2:27 pm IST

ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் பயன்பெறும் வகையில் உடல் எடை சீரமைப்பு, உணவு ஊட்டச்சத்து ஆகிய பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமூகத்தை சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு, உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சி பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், பிளஸ்2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்குள், குடும்ப ஆண்டு வருவாய்ரூ, 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாள்கள் மேலும் இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபா்கள் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதாற்கான செலவு தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

இப்பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமாா் ரூ.15000 முதல் ரூ.20,000 வரையில் வருவாய் ஈட்டும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணைய தளமான www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

Summary

Applications invited for courses in Nutrition and Weight Management Exercises!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.