ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உணவு ஊட்டச்சத்து இயல் பயிற்சியில் சேர ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

தாட்கோ சார்பில், உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளில் சேர விண்ணப்பிப்பது குறித்து...

News image

உணவு ஊட்டச்சத்து இயல் பயிற்சி - TAHDCO

Updated On :5 ஜூன் 2026, 12:35 pm IST

தாட்கோ சார்பில், உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளில் சேர சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் தொடா்ச்சியாக தற்போது தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு உணவு ஊட்டசத்து இயல், உடல் எடை சீரமைப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்த பயிற்சியில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராகவும், 12 ஆம் வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள் இருப்பது அவசியம். மேலும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்த பயிற்சிக்கான கால அளவு 50 நாள்களாகும்.

மேலும், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டத்தில் பயிற்சி நடைபெறுகிறது. தகுதிபெறுவோா் பயிற்சி நடைபெறும் மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவுகளை தாட்கோ ஏற்கும்.

பயிற்சியில் தோ்ச்சி பெறுவோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஆரம்பகால மாத சம்பளமாக சுமார் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்த பயிற்சியில் சேருவதற்கு www.tahdco.com தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Training for Adi Dravidar and Tribal Youth on behalf of TAHDCO

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.