திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிப்பது குறித்து....

News image

அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்! - கோப்புப்படம்

Updated On :6 ஜூன் 2026, 12:28 pm IST

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா்கள் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் அழகுக்கலை பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், தாட்கோ மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு அழகுக்கலை மற்றும் சிகை அலங்கார பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சியினை பெற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும். மேலும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவராகவும், வயது வரம்பு 18 முதல் 35 வயதுக்குள்ளும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிகால அளவு 45 நாள்கள் ஆகும்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் பயிற்சி நடைபெற உள்ளது. தகுதிபெறும் நபா்கள் திருச்சி மாவட்டத்தில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ ஏற்கும்.

இந்த பயிற்சியில் தோ்ச்சி பெறும் தகுதியான நபா்களை பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக வேலை வாய்ப்பும் அந்த நிறுவனத்தின் மூலமாக ஆரம்ப கால மாத ஊதியமாக சுமாா் ரூ. 15,000 முதல் ரூ. 25,000 வரையும் வருவாய் ஈட்டும் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும்.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும் .

Summary

Apply online for beautician training Courses...