இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும், கோல் இந்தியா லிமிடெட் 'மகாரத்னா' பொதுத்துறை நிறுவனமாகும். கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகவும், இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த நிலக்கரியில் சுமார் 75 சதவீதத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் திகழ்கிறது. சுமார் 2.12 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவன வேலைவாய்ப்பு வழங்குநர்களில் ஒன்றாகவும் உள்ளது.
இந்த நிறுவனத்தில் தற்போது, மேலாண்மை பயிற்சி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது பற்றிய விபரம் வருமாறு:
வேலைவாய்ப்பு அறிவிவு எண்: 01/2026
பணி: Management Trainee (Mining)
காலியிடங்கள்: 276
சம்பளம் : மாதம் ரூ.60,000 - 80,000
வயதுவரம்பு : 30.4.2026 தேதியின்படி 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
தகுதி: பொறியியல் துறையில் மைனிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். கேட் - 2025 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கேட் -2025 தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவர்.
நேர்முகத்தேர்வின் அடிப்படையில் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வு தொடர்பான விபரங்கள் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்விற்கு வரும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000. கட்டணத்தை ஆன் லைன் முறையில் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, இஎஸ்எம் பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: www.coalindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 7.6.2026
Summary
CIL Recruitment 2026 for 276 Management Trainee (MT) in Grade Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெற்காசிய மகளிா் கால்பந்து: இறுதி ஆட்டத்தில் நாளை இந்தியா - வங்கதேசம் மோதல்

மே மாதத்தில் ‘கோல் இந்தியா’ நிலக்கரி உற்பத்தி 12% சரிவு!
யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: தென் கொரியாவை வென்றது இந்தியா

என்.எல்.சி இந்தியா 4வது காலாண்டு லாபம் ரூ. 1,393 கோடியாக உயர்வு!
விடியோக்கள்

பாஜகவில் இருந்து விலகியது ஏன்?அரசியல் இயக்கம் தொடங்குவது ஏன்? Annamalai விளக்கம்!

கோட் போட்டு கோட்டை விட்டுட்டீங்களே! முதல்வர் விஜய்க்கு உதயநிதி பதிலடி! | Dinamani

Dinamani வார ராசிபலன்! | June 7 முதல் 13 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




