விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

ஈவுத்தொகையாக ரூ. 3,896 கோடி வழங்கிய ஐடிசி!

ஐடிசி-யிடமிருந்து, 2026 ஆம் நிதியாண்டில் ஈவுத்தொகையாக மொத்தம் ரூ. 3,895.74 கோடி பெற்றுள்ளதாக தெரிவித்தது.

News image

ஐடிசி

Updated On :28 ஜூன் 2026, 9:52 pm IST

புதுதில்லி: இந்திய நிறுவனமான ஐடிசி-யிடமிருந்து, பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனத்தின் 2 நிறுவனங்கள் 2026 ஆம் நிதியாண்டில் ஈவுத்தொகையாக மொத்தம் ரூ. 3,895.74 கோடி பெற்றுள்ளதாக தெரிவித்தது.

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனம் ஐடிசி-யில் வைத்துள்ள முதலீடு மூன்று துணை நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. அவை டொபாக்கோ மேனுஃபாக்சரர்ஸ் இந்தியா லிமிடெட், மிடில்டன் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி லிமிடெட் மற்றும் ரோத்மான்ஸ் இன்டர்நேஷனல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஆகும்.

2025 ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட ரூ. 4,238.93 கோடியுடன் ஒப்பிடுகையில், 2026-ஆம் நிதியாண்டில் டொபாக்கோ மேனுஃபாக்சரர்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் மிடில்டன் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கு ஐடிசி ரூ. 3,895.75 கோடி ஈவுத்தொகையாக வழங்கியது. இது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.1 சதவீதம் சரிவாகும்.

நிதியாண்டு 2026ல், ஐடிசி, டொபாக்கோ மேனுஃபாக்சரர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 3,197.89 கோடியும், மிடில்டன் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி-க்கு ரூ. 697.86 கோடி ஈவுத்தொகையாக வழங்கியது. இருப்பினும், 1.24 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள ரோத்மான்ஸ் இன்டர்நேஷனல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஈவுத்தொகை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவனத்துடன் தொடர்புடைய இந்த இரண்டு நிறுவனங்களின் ஈவுத்தொகை வருவாயில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, ஐடிசி-யில் இந்த நிறுவனங்கள் வைத்திருக்கும் பங்குகளின் அளவு குறைந்ததே முக்கிய காரணமாகும்.

மார்ச் 2026 நிலவரப்படி, டொபாக்கோ மேனுஃபாக்சரர்ஸ் இந்தியா லிமிடெட் 17.79 சதவீத பங்குகளையும், மிடில்டன் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி லிமிடெட் 3.88 சதவீத பங்குகளையும், ரோத்மான்ஸ் இன்டர்நேஷனல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் 1.24 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது ஐடிசி.

Summary

British American Tobacco have received a dividend payout of Rs 3,895.74 crore from the Indian conglomerate ITC in FY26.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.