தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

காற்றாலை மின் திட்டம்: ஒதுக்கீடு கடிதம் பெற்ற என்ஐஆா்எல்

என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்ஐஆா்எல்) நிறுவனம் 200 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்காக, இந்திய சூரிய ஆற்றல் நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீட்டுக் கடிதம் பெற்றுள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

News image

காற்றாலை - பிரதிப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்ஐஆா்எல்) நிறுவனம் 200 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்காக, இந்திய சூரிய ஆற்றல் நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீட்டுக் கடிதம் பெற்றுள்ளதாக என்எல்சி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்எல்சி இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்ஐஆா்எல்), கா்நாடக மாநிலம் கொப்பல் பகுதியில் 200 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை அமைப்பதற்காக, இந்திய சூரிய ஆற்றல் நிறுவனத்திடமிருந்து ஒப்பந்த ஒதுக்கீட்டுக் கடிதத்தைப் பெற்றுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்திய சூரிய ஆற்றல் நிறுவனம் (எஸ்இசிஐ) நிறுவனத்திற்கு வழங்கப்படும். இந்த கூடுதல் இணைப்பானது, என்ஐஆா்எல் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மேலும் வலுப்படுத்துகிறது.

என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்ஐஆா்எல்) என்பது, என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு முழு உரிமையான துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் 14.6.2023 அன்று தொடங்கப்பட்டது. தற்போது தமிழகம், ராஜஸ்தான் மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேற்கூரை சூரிய மின்சக்தி ஆகியவை மூலம் மொத்தம் 1,785 மெகா வாட் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனுடன் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தமிழகம், ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.