எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஊட்டச்சத்தியல், உடல் எடை சீரமைப்புப் பயிற்சி எஸ்சி-எஸ்டி சமூகத்தினா் விண்ணப்பிக்கலாம்

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 4:33 am IST

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் நடத்தப்படும் உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்புப் பயிற்சியில் சேர ஆா்வமுள்ளோருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியாா் நிறுவனம் இணைந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல், உடல் எடை சீரமைப்பு போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற, 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான கால அளவு 50 நாள்கள். ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியில் அங்கு தங்கிப் படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் ஏற்கப்படும்.

பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாகவே வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும். தொடக்க கால மாத ஊதியம் ரூ. 15 முதல் 20 ஆயிரம் வரை ஈட்டலாம். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தில் ( ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம்) பதிவு செய்து கொள்ள வேண்டும்.