பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

குழந்தைகள் பருமன் ஏன்? தடுக்க என்ன செய்ய வேண்டும்?

மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகுந்த மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் தங்களது வயதுக்கும், உயரத்துக்கும் ஏற்ற ஆரோக்கியமான எடையைவிடக் கூடுதலான எடையுடன் வளர்கின்றனர்.

News image
Updated On :12 ஜூலை 2026, 4:03 am IST

'இன்றைய காலகட்டத்தில் மக்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் மிகுந்த மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளதால், குழந்தைகள் தங்களது வயதுக்கும், உயரத்துக்கும் ஏற்ற ஆரோக்கியமான எடையைவிடக் கூடுதலான எடையுடன் வளர்கின்றனர்'' என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் கடையநல்லூர் சி.எம்.மூர்த்தி.

தென்காசி மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்களைத் தொடர்ந்து நடத்தி வருபவரும், சர்க்கரை நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவருமான மூர்த்தியிடம் பேசியபோது:

'குழந்தைகள் அதிக கொழுப்புச் சத்துடன் உடல் எடை அதிகமாக இருப்பதால் , அவர்கள் பிற்காலத்தில் மனநலப் பாதிப்பு உள்ளிட்ட பலவிதமான இன்னல்களைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனை பெற்றோர்கள் உணர்தல் அவசியம்.

உடல் பருமனுக்கான காரணங்கள்

தற்காலத்தில் பெற்றோர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்ற மனநிலைக்கு வந்துள்ளதால், குழந்தைகளை அதிகச் செல்லத்துடன் வளர்க்கின்றனர். அவர்கள் விரும்பிக் கேட்கும் குளிர்பானங்கள், 'ஜங் ஃபுட்' எனப்படும் துரித உணவுகள், சர்க்கரை இனிப்பு நிறைந்த உணவுகளான சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் கேட்கும்போதெல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர். அதிக அளவில் கலோரி நிறைந்த இந்தப் பொருள்களால் உடல் பருமன் அதிகமாகிறது.

குழந்தைகள் செல்போன், கணினிகளில் அதிக கவனம் செலுத்துவதோடு முழு நேரமும் அவற்றையே உபயோகிப்பதால் அவர்கள் சாப்பிட்ட உணவின் கலோரிகள் செலவிடப்படாமல் உடலில் தங்கி விடுகிறது.

 இளம் வயதில் விளையாட வேண்டிய நேரங்களில் அவர்களைப் படிக்கச் சொல்லியும் அல்லது கணினி, கைப்பேசியில் விளையாடுவதற்கும் அதிக வாய்ப்புகள் கொடுப்பதால் வெளிப்புற விளையாட்டுகளில் ஆர்வம் மிகவும் குறைந்து வருகிறது. மாலை நேரங்களில் விளையாடச் சென்றால் அவர்களின் உடலில் உள்ள கலோரிகள் செலவிடப்படுவதோடு, இயற்கைக் காற்றும் கிடைக்கும்.

 பெற்றோர் தங்கள் குழந்தை அதிக எடையுடன் காணப்பட்டால் தாங்கள் மிகுந்த அக்கறையுடன் வளர்ப்பதாக எண்ணி பெருமைப்படுதல் குழந்தையின் உடல் எடை அதிகமாவதற்கு ஒரு காரணமாகிறது.

மரபு அணுக்கள், உடலில் சுரக்கும் ஹார்மோனில் மாற்றங்கள், குடும்ப உடல் பருமன் வரலாறு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகள் பருமனாக இருந்தால் எடை குறைத்தல் சற்று கடினம். வாழ்க்கை நடைமுறையில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் உடல் பருமனைக் கட்டுக்குள் வைக்கலாம்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் பள்ளிக் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பதை பெற்றோர்கள் உணர்தல் வேண்டும். அதிக எடை , அதிக உணவை விரும்பும். அதன் மூலம் மேலும் எடை அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும்பொழுது படிப்பில் கவனம் குறையும். இளம் வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், செரிமான பிரச்னைகள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

எடை பருமனைக் குறைப்பதற்கான முறைகள்

குழந்தைகளுக்கான உணவுகளில் மாவுச் சத்து அதிகம் இருப்பதைத் தவிர்த்திடல் வேண்டும். காய்கள், பழவகைகள், தானிய வகைகள், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். வீட்டு உணவுகளையே அளிக்க வேண்டும். வெளியில் உணவகங்களில் பொறிக்கப்பட்ட உணவுப்பொருள்களை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்த்தல் வேண்டும். சுவையான உணவுகளை அதிகம் சாப்பிட்டால் அதுவே எடை அதிகமாகக் காரணமாகிவிடும்.

குழந்தைகளுக்கு உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல் வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரங்களில் வெளியே சென்று விளையாடுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்றவற்றில் ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தங்கள் குழந்தையின் ஆரோக்கிய நிலையைப் பரிசோதித்துக் கொள்ளுதல் வேண்டும்.

குழந்தைகளின் சராசரி எடைபிறந்தவுடன் -3 கிலோ, 6 மாதங்களில்- 6 கிலோ, ஒரு வயதில்- 9 கிலோ, இரு வயதில்-11 கிலோ. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கிலோ எடை அதிகரிக்கும்.

எடை கணக்கிடும் முறை

வயதை இரண்டால் பெருக்கி, எட்டைக் கூட்டினால் வரும் எடை அளவில் குழந்தைகள் இருக்கவேண்டும். அதன்படி, ஐந்து வயதில் 18 கிலோ இருக்கலாம். இதில், இரண்டு கிலோ வரை முன்பின் இருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் பொதுவாக பின்னர் உடல் பருமன் வர வாய்ப்பு அதிகம். சிறுவர், சிறுமியர் இடையில் எடையில் சற்று மாறுபாடுகள் உண்டு. மருத்துவர் உதவியுடன் பி.எம்.ஐ. குறியீட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிறு குழந்தைகள் கைப்பேசிகளை அதிகம் உபயோகிப்பதால், இளம் வயதிலேயே கண் கோளாறு ஏற்படுவதோடு சிறு வயதிலேயே கண்ணாடி அணியும் சூழல் உருவாகும்.

பள்ளிகள்தோறும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டால் நலம் பயக்கும்'' என்கிறார் சி.எம்.மூர்த்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.