
தாய்லாந்து கடலில் காவல் விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தாய்லாந்தின் ஹுவா ஹின் மாவட்டத்தில் இன்று (ஏப்.25) காலை 8 மணியளவில் சிறிய ரக காவல் விமானத்தில் அந்நாட்டு காவல் துறை அதிகாரிகள் 6 பேர் பாராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பிரசுவாப் கிரி கான் மாகாணத்திலுள்ள ஹுவா ஹின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள கடல்கரையில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அந்த விமானத்தில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதுடன் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தாய்லாந்து அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிக்க: பசிபிக் பெருங்கடலில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! ஈக்வடாரில் சுனாமி எச்சரிக்கை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.