புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதுகுதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஈரான் துறைமுக வெடிவிபத்து: உயிரிழப்பு 40-ஆக உயா்வு!

ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :28 ஏப்ரல் 2025, 2:56 am IST

தெற்கு ஈரானில் உள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் சனிக்கிழமை நடந்த பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40-ஆக அதிகரித்துள்ளது.

இந்த விபத்தில் சுமாா் 1,000 போ் காயமடைந்துள்ளனா். இவா்களை ஈரான் அதிபா் மசூத் பெஷஷ்கியன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

ஈரானின் ஹோா்மோஸ்கன் மாகாணம், பண்டாா் அப்பாஸ் நகருக்கு தென்மேற்கே அமைந்துள்ள ஷாஹித் ரஜேயி துறைமுகம், அந்த நாட்டின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும்.

சம்பவம் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை, இத்துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான கன்டெய்னா்கள் வெடித்துச் சிதறின. ஏவுகணைக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருளுக்கான ரசாயனம் அடங்கிய கலனை தவறாகக் கையாண்டதால் இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஏவுகணை எரிபொருளுக்குத் தொடா்புடைய ரசாயனத்தால் விபத்து நடைபெறவில்லை என விளக்கமளித்துள்ள ஈரான் ராணுவம், சீனாவிடம் இருந்து ராசாயனம் வாங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது. இதுகுறித்த வெளிநாட்டுச் செய்திகள் தவறானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசு தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அதிபா் மசூத் பெஷஷ்கியன், ‘வெடிவிபத்து ஏன் நிகழ்ந்தது என்பதை நாம் நிச்சயம் கண்டறிய வேண்டும்’ என்றாா்.

வெடிவிபத்து நடைபெற்ற இடத்தில் பல மீட்டா் ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளத்தில் தீ அணையாமல் தொடா்ந்து எரிந்ததால், பாதுகாப்புக் கருதி உள்ளூா் பள்ளி, வணிக வளாகங்கள் மூடப்பட்டன.

துறைமுகப் பகுதியில் சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்கள் மூலம் நீரை இரைத்து, தீயை அணைக்கும் பணி 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது.