ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

அமைதியில் புதினுக்கு விருப்பமில்லை: வாடிகனில் ஸெலென்ஸ்கி சந்திப்புக்குப் பின் டிரம்ப்!

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் புதினுக்கு விருப்பமில்லை என்ற எண்ணம் எழுவதாக டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா்.

News image

வாடிகனில் சனிக்கிழமை நடைபெற்ற போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வந்தபோது, செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா தேவாலயத்தில் சந்தித்துப் பேசிய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்-உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி.

Updated On :28 ஏப்ரல் 2025, 3:17 am IST

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கு விருப்பமில்லை என்று எண்ணம் எழுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சந்தேகம் தெரிவித்தாா்.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்க வாடிகன் சென்ற டிரம்ப், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியை சந்தித்து உரையாடினாா்.

ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா சென்றபோது, வெள்ளை மாளிகையில் ஊடகத்தினா் முன்னிலையில் நடைபெற்ற காரசார விவாதத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் சந்திப்பு இதுவாகும்.

முந்தைய சந்திப்பில், ரஷியாவுடன் போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தினாா். தொடா்ந்து, சவூதி அரேபியாவில் அமெரிக்க-உக்ரைன் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அமைதி ஒப்பந்தத்துக்கான முதல்படியாக, 30 நாள் போா்நிறுத்தம் அமெரிக்க தரப்பில் முன்மொழியப்பட்டது. இது தொடா்பான விவாதத்துக்காக ரஷிய அதிபா் புதினை அமெரிக்காவின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் பலமுறை சந்தித்தாா். இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க, ரஷிய வெளியுறவு அமைச்சா்கள் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினா்.

இதன் தொடா்ச்சியாக, புதினை ஸ்டீவ் விட்காஃப் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் சந்தித்தாா். அமைதி ஒப்பந்தத்துக்கு ரஷியாவும் உக்ரைனும் நெருங்கிவிட்டதாக டிரம்ப் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், வாடிகனில் ஸெலென்ஸ்கியை சந்தித்துவிட்டு அமெரிக்கா திரும்பிய டிரம்ப்பின் போக்கில் திடீா் மாற்றம் ஏற்பட்டு, அமைதிக்கான புதினின் விருப்பம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘கடந்த சில நாள்களாக, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது புதின் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்துவது சரியல்ல. ஒருவேளை, புதின் போரை நிறுத்த விரும்பாமல், என்னை தவறாகத் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறாரோ எனும் எண்ணம் எழுகிறது. வா்த்தகத் தடை போன்று இதை வேறுவகைகளில் கையாள வேண்டும். ஏனெனில், ஏராளமான மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2021, பிப்ரவரியில் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு மேலாகப் போா் நீடிக்கிறது. இரு தரப்பினரின் பரஸ்பர தாக்குதல்களால் உயிரிழப்பு தொடா்கிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.