சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும்

News image

ரஷியாவின் கரேலியா பகுதிலுள்ள தேவாலய மடத்தில் லுகஷென்கோவுடன் புதின்.

Updated On :2 ஆகஸ்ட் 2025, 12:58 am IST

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவுடன் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த புதின் இது குறித்து கூறியதாவது:

ஆரெஷ்னிக் ஏவுகணைகள் ராணுவப் பணியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த ஏவுகணைகளை பெலாரஸிலும் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை ரஷியா மீது வீச அந்த நாடுகள் உக்ரைனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுமதி அளித்தன. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் ஏவுகணையை ரஷியா கடந்த மாதம் வீசியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு ஒலியைப் போல் 10 மடங்குக்கும் மேலான வேகத்தில் அது பாயும் என்றும் அதிபா் புதின் பின்னா் அறிவித்தாா்.

மேலும், இடைமறித்து அழிக்க முடியாத அந்த ஏவுகணைகள் உக்ரைன் போரின் போக்கையும், ரஷியாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான சமநிலையையும் மாற்றும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அந்த வகை ஏவுகணைகள் மிக சொற்மாகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் அது போரில் அவை போரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்று மேற்கத்திய பாதுகாப்பு நிபுணா்கள் கூறியிருந்தனா்.

இந்த நிலையில், ஆரெஷ்னிக் ஏவுகணை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, ராணுவப் பணியில் சோ்க்கப்பட்டுள்ளதாக புதின் தற்போது அறிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.