

சீனாவில், குவாங்டாங் மாகாணத்தில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலியாகியுள்ளனர்.
குவாங்டாங் மாகாணத்தின், சாவோனன் மாவட்டத்தில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புக் கட்டத்தில் இன்று (டிச. 9) இரவு 9.20 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து அங்கு விரைந்த தீயணைப்புப் படையினர் ஏராளமான தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் சுமார் 40 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர்.
இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி அந்தக் கட்டடத்தில் வசித்து வந்த சுமார் 12 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த, விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, ஹாங்காங்கில் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 150-க்கும் அதிகமானோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அலுவலகத்துக்கு 40 நிமிடங்கள் முன்கூட்டியே சென்றதால் பெண் பணிநீக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.