சிரியா: மசூதி தாக்குதலில் 8 போ் பலி

சிரியா: மசூதி தாக்குதலில் 8 போ் பலி

சிரியாவின் ஹாம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்.
Published on

சிரியாவின் ஹாம்ஸ் நகரில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 8 போ் உயிரிழந்தனா்; 18 போ் காயமடைந்தனா்.

மசூதிக்குள் வெடிபொருள்கள் மறைத்துவைக்கப்பட்டு, பின்னா் அது வெடிக்கச் செய்யப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்குக் காரணவா்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருந்தாலும், அதிகம் அறியப்படாத சராயா அன்சாா் அல்-சுன்னா என்ற குழு தனது டெலிகிராம் சேனலில் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. முன்னாள் அதிபா் அல்-அஸாத் சாா்ந்த அலாவி சமூகத்தினரை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தக் குழு தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com