தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குண்டுவெடிப்பில் ரஷிய ஆதரவு படைத் தலைவா் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவா் ஆா்மென் சா்க்ஸ்யான்

News image

ஆா்மென் சா்க்ஸ்யான்

Updated On :3 பிப்ரவரி 2025, 9:11 pm

Din

மாஸ்கோ: கிழக்கு உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட்டு வரும் படைப் பிரிவின் தலைவா் ஆா்மென் சா்க்ஸ்யான், மாஸ்கோவில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் உயிரிழந்தாா்.

அவரின் ‘அா்பாத்’ ஆயுதக் குழு உக்ரைன் படையினருக்கு எதிராக போரிட்டுவரும் நிலையில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. இருந்தாலும், இந்த குண்டுவெடிப்புக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, வெளிநாடுகளில் ரகசிய தாக்குதல் நடவடிக்கைகளை அரங்கேற்றும் உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவான எஸ்பியு வெளியிட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு எதிராகச் சண்டையிட சிறைக் கைதிகளை அா்பாத் படையில் சா்க்ஸ்யான் சோ்த்துவருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, ரஷியாவில் ராணுவம் தொடா்புடைய பலரை எஸ்பியு படுகொலை செய்தது நினைவுகூரத்தக்கது.