செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும்: பிரதமர் மோடி

செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும் என பிரான்ஸில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

செய்யறிவு ஏற்கனவே, நமது கொள்கைகள், பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் சமூகத்தை வடிவமைக்கத் தொடங்கிவிட்டது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். எனவே, செய்யறிவு அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரான்ஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டைத் தொடக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

செயற்கை நுண்ணறிவைக் கண்டு மிகவும் அஞ்சும் விஷயம் ஒன்றுதான் வேலை இழப்பு. ஆனால், உண்மையில் தொழில் நுட்பத்தால் வேலை வாய்ப்புகள் இல்லாமல் போவதில்லை என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவினால் வேலைகளின் தன்மை காலப்போக்கில் மாறுகிறது, புதிய வகை வேலைகள் உருவாகின்றன என்றார்.

நாம் நமது வளங்களையும் திறமைகளையும் ஒன்றிணைத்து, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் அமைப்புகளை உருவாக்க வேண்டும் மற்றும் உலகிற்கு நன்மை செய்வதற்காக ஒருசார்பு இல்லாத தரமான தரவுத்தொகுப்புகளை உருவாக்க வேண்டும். மறுபக்கம் இணைய பாதுகாப்பு, தவறான தகவல்கள் மற்றும் மோசமான போலிகள் போன்வற்றின் மீதான மக்களின் கவலைகளை நாம் தீர்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

செயற்கை நுண்ணறிவு என்பது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவும். இது சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் பல துறைகளில் செய்யப்பட்டுக்குக் கொண்டு வரலாம். நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்ட, உலகின் மிகச் சிறந்த பயணத்தை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு உதவும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com