பாலஸ்தீன குடியிருப்புகள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
காஸா எல்லையில் இடிபாடுகளுக்கு மத்தியில் கூடாரமிட்டு வாழும் மக்கள்
காஸா எல்லையில் இடிபாடுகளுக்கு மத்தியில் கூடாரமிட்டு வாழும் மக்கள்AP
Published on
Updated on
1 min read

பாலஸ்தீன எல்லைக்குட்பட்ட துல்காரெம் குடியிருப்பு மற்றும் அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேல் ராணுவம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் தொடர்ந்து 17வது நாளாக துல்காரெம் பகுதிக்கு உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளுக்குட்பட்ட 3 கட்டடங்களை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளதாகவும், அங்கிருந்து பாலஸ்தீன மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் மீது தாகுதல் நடத்துவதாகவும் கூறப்படுகிறது.

துல்காரெம் மற்றும் நுர் ஷாம்ஸ் பகுதிகளில் உள்ள முகாம்களை இஸ்ரேல் ராணுவம் தீயிட்டு எரித்துள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மூன்று வீடுகளையும் முற்றிலும் அழித்துள்ளது.

மேலும் துக்காரெம் பகுதியிலுள்ள மசூதி அருகே இருந்த வீட்டில் இரு பெண்களை இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்துச் சென்றுள்ளதாக வாஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டு, ஹமாஸ் வசம் உள்ள 33 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர்.

இதுவரை 5 முறை விடுவிப்புகள் மூலம் 21 இஸ்ரேல் பணயக்கைதிகளும், 730 பாலஸ்தீன சிறை கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பாலஸ்தீன எல்லையின் மேற்கு கரைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | காஸா மருத்துவர்களை துன்புறுத்தும் இஸ்ரேல் ராணுவம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com