தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மாலி: தங்கச் சுரங்கம் சரிந்து 42 பேர் பலி!

விபத்தின்போது சுரங்கத்தினுள் 1,800 பேர் இருந்ததாகத் தகவல்

News image

பிரதிப் படம் - AI | X

Updated On :16 பிப்ரவரி 2025, 6:03 pm IST

மாலி நாட்டில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவு விபத்தால் 42 பேர் பலியாகினர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலி நாட்டில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் தங்கச் சுரங்கத்தில் சனிக்கிழமை (பிப். 15) ஏற்பட்ட சரிவு விபத்தில் 42 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. விபத்தின்போது, 1,800 பேர் சுரங்கத்தினுள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் பெரும்பாலானோர் காயமடைந்துள்ளனர்.

சீன நாட்டினர்தான் இந்தச் சுரங்கத்தை செயல்படுத்தி வருவதாக உள்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்காவில் சட்டவிரோத சுரங்கங்களை தடுக்க அந்நாட்டு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டாலும், இதுவரையில் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை.

இந்த மாலி விபத்து, ஒரே மாதத்தில் நடந்த இரண்டாவது விபத்து. இதே பகுதியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த சரிவு விபத்தில் 70-க்கும் அதிகமானோர் பலியாகினர். மாலி நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் (2 மில்லியனுக்கும் அதிகமானோர்) வருமானத்துக்காக சுரங்கத் துறையை நம்பியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.