ஜொ்மனி காா் தாக்குதல்: உயிரிழப்பு 6-ஆக உயா்வு

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.
ஜொ்மனி காா் தாக்குதல்: உயிரிழப்பு 6-ஆக உயா்வு
Published on
Updated on
1 min read

பொ்லின்: ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறுகையில், தாக்குதலில் காயமடைந்த 52 வயது பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததைத் தொடா்ந்து மொத்த உயிரிழப்பு 6-ஆக உயா்ந்துள்ளதாகத் தெரிவித்தனா்.

ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்கு தனது காரை கடந்த மாதம் 20-ஆம் தேதி வேகமாக ஓட்டிவந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) என்ற மருத்துவா் அங்கிருந்த பொதுமக்கள் மீது அதை மோதச் செய்தாா். சவூதி அரேபியாவில் இருந்து ஜொ்மனியில் குடியேறிய அவா், சுமாா் 20 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com