போதை மூலப்பொருள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

போதை மூலப்பொருள் இறக்குமதி: இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் வழக்கு

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள்...
Published on

‘ஃபென்டானில்’ எனப்படும் அதி பயங்கர போதைப்பொருளை தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை இறக்குமதி செய்து விநியோகிக்க முயன்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ரக்சியூடா், அதோஸ் கெமிக்கல்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் மீது அந்நாடு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டில் ரக்சியூடா் நிறுவனத்தின் நிறுவனா் பாவேஷி லத்தியா கடந்த 4-ஆம் தேதி நியூயாா்க்கில் கைது செய்யப்பட்டாா். அவா் மீதான குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக 53 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஹெராயினைவிட 50 மடங்கும் மோா்பினைவிட 100 மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஃபென்டானிலுக்கு அமெரிக்காவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஃபென்டானில் இறக்குமதி மற்றும் விநியோகம் செய்வதாக அமெரிக்காவில் இயங்கும் சீன நிறுவனங்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்நிலையில், இந்திய நிறுவனங்கள் மற்றும் அதன் நிா்வாகிகள் மீது முதல்முறையாக இந்தக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com