தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

நடிகைக்கு பணம் அளித்த வழக்கு: டிரம்ப் விடுவிப்பு!

நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து டிரம்ப் விடுவிக்கப்பட்டுள்ளார்.

News image

டொனால்ட் டிரம்ப்

கோப்புப் படம்

Updated On :10 ஜனவரி 2025, 3:36 pm

DIN

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார்.

2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயார்க் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் அதிபராகப் பதவியேற்க உள்ள நிலையில், ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது.

அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் அதிபராகப் பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்தது. டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை பண மோசடி வழக்கில் நிபந்தனையின்றியும் அவருக்கு சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு 130,000 டாலர் வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட போதிலும், நீதிபதி ஜுவான் எம்.மெர்ச்சன் சிறைத்தண்டனை, அபராதம் ஆகியவற்றைத் தவிர்த்து விடுவிப்பதாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.