தவெக 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்தமிழக காவல்துறை அதிரடி: 3 நாள்களில் 1,049 ரௌடிகள் கைதுதென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது!8 நாள்களில் ரூ. 1,000 கோடி வசூலித்த ராமாயணா!தோ்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு: இன்று தீா்ப்புஅரசுப் பள்ளிகளில் இன்று குழந்தைகள் தின கொண்டாட்டம்: மாணவா்களுக்கு கேக் வழங்குகிறாா் முதல்வா் விஜய்இந்தியாவின் ரஷிய எரிபொருள் இறக்குமதி: அக்டோபரில் ரூ.67,000 கோடியாக அதிகரிப்புபிகாரிலிருந்து சென்னைக்கு நவ. 17-இல் சிறப்பு ரயில்நவ.19-க்கு பிறகு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புதைவானை முந்திய இந்தியப் பங்குச் சந்தை: ரூ.508 லட்சம் கோடி மதிப்புடன் உலக அளவில் 5-ஆவது இடம்

அமெரிக்க அதிபருக்கே 7 கட்டுப்பாடுகள் இருக்கின்றன! கார் ஓட்டக் கூடாது!

கட்டுப்பாடுகளை பிறப்பிக்கும் அமெரிக்க அதிபருக்கே 7 கட்டுப்பாடுகள் இருக்கின்றதாம்.

டொனால்ட் டிரம்ப்

Updated On :

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றிருக்கிறார். அவருடன் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் பதவியேற்றுக்கொண்டார்.

வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இந்திய நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.

அதிபராகப் பதவியேற்றதுமே, அமெரிக்காவுக்குத்தான் முன்னுரிமை என்பதை வலியுறுத்தும் பல உத்தரவுகளில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு அதிரடி காட்டியிருக்கிறார்.

புதிய புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அமெரிக்க அதிபராக இருந்தாலுமே, அவர்களுக்கே பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

கார் ஓட்டக் கூடாது

அமெரிக்காவின் அதிபராக இருப்பவர், முன்னாள் அதிபர்கள், துணை அதிபர் யாரும், கார் ஓட்டுவதற்கு அனுமதி கிடையாது. ஒருவர் அமெரிக்க அதிபராகிவிட்டாலே, அவரது வாழ்நாள் முழுக்க அவர் சாலைகளில் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஆனால், அவர்களது பங்களாக்கள், விடுமுறைக் கொண்டாட்டங்களின்போது தங்கும் இடங்களுக்குள் வேண்டுமானால் ஆசை தீர கார் ஓட்டிப் பார்த்துக் கொள்ளலாம்.

சொந்தமாக செல்ஃபோன் கிடையாது

அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர், பாதுகாப்புக் காரணங்களுக்காக, சொந்தமாக செல்ஃபோன் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கடைசியாக ஒபாமா அதிபராக இருந்த போது, ஆலோசகர்களின் அறிவுறுத்தலை தாண்டி, பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட ஐபேட் வைத்திருந்தார். ஜோ பைடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் அணிந்திருந்தார். முன்பு டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது, குறுகிய காலத்துக்கு செல்ஃபோன்களை மாற்றி வந்தார். இப்போது என்ன செய்வார் என்று தெரியவில்லை.

பள்ளி கலை நிகழ்ச்சிகளுக்குத் தடை

அதிபராக இருப்பவரின் குழந்தைகள் அல்லது பேரக் குழந்தைகளின் பள்ளிகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது. அவ்வாறு பங்கேற்பதாக இருந்தால் பள்ளிகளுக்குக் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட வேண்டும் என்ற பாதுகாப்புக் காரணமே இதற்குக் காரணம்.

சமூக ஊடகங்கள் பக்கமே வரக்கூடாது

சமூக ஊடகங்கள் மூலம், அமெரிக்க அதிபர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், ஒரு அமெரிக்க அதிபராக இருப்பவர் சமூக ஊடகங்கள் பக்கமே வரக்கூடாதாம்.

வணிக விமானங்களில் ஏற முடியாது

அமெரிக்க அதிபராக இருக்கும் ஒருவர், அமெரிக்க ஏர்லைன்ஸில் பயணிக்க முடியுமா என்றால்.. முடியாது. அதற்கு அவரது ரகசிய பாதுகாப்பு சேவை அமைப்பு நிச்சயம் ஒப்புக்கொள்ளாது. அமெரிக்க அதிபர்களுக்கான தனி விமானத்தில் மட்டுமே அதிபர் பயணிக்க முடியும்.

தூக்கி எறிதல் என்பதே கூடாது

எந்த ஆவணங்களையும் குப்பை என்று ஒரு அமெரிக்க அதிபரால் தூக்கி எறிய முடியாது. தேவையற்ற மின்னஞ்சல்களை அழிக்க முடியாது. ஒவ்வொரு துண்டுச் சீட்டும் கூட வெள்ளை மாளிகை ஊழியர்களின் ஆய்வுக்கு உள்பட்ட பிறகே அவர்களால்தான் அது குப்பையில் போட வேண்டியது என்று உறுதி செய்யப்படும்.

கடைசியாக சொல்லியிருப்பதுதான்.. சிறப்பு வெகு சிறப்பு..

வெளியே குளுகுளு என தென்றல் காற்று வீசினாலும் கூட, ஒரு அமெரிக்க அதிபராக இருப்பவர், தனது அறையின் ஜன்னல் கதவுகளை திறக்கக் கூடாது. அமெரிக்க அதிபர் மட்டுமல்ல, வெள்ளை மாளிகையின் எந்த ஜன்னல் கதவுகளும் திறக்கப்படக் கூடாது. யாரும் திறக்கவும் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.